• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தீய சக்தி என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான் -ஓபிஎஸ் அணி எம்.வி .சதீஷ் பேட்டி

Byஜெ.துரை

Jan 25, 2023

ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக சென்னை மாவட்ட கழக செயலாளர் .எம். வி சதீஷ் அவரது தலைமையில் மொழிப்போர் தியாகத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம் சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டின் முன்பு ஓபிஎஸ் தலைமையிலான அஇஅதிமுக சென்னை மாவட்ட கழக செயலாளர் .எம். வி சதீஷ் அவரது தலைமையில் உயிர்நீத்த தியாகிகளின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்தும்,மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் வீரவணக்கம் வீரவணக்கம் என்று கோஷமிட்டு அஞ்சலியை செலுத்தினர்.


இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களின் சந்திப்பில் பேசிய எம் பி சதீஷ்:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா தீய சக்தி திமுக கருணாநிதி என்று கூறுவார் ஆனால் எங்களது கட்சியில் தீய சக்தி என்றால் அது எடப்பாடி பழனிசாமி தான் அந்த தீய சக்தி அடுத்த வீரவணக்கம் செலுத்தும் நேரத்தில் அந்த தீய சக்தி இந்த கட்சியிலே இருக்காது என்றும் எங்கள் கட்சியின் ராஜ துரோகியை அடுத்த வீரவணக்கத்திற்குள் அவரை முற்றிலும் அகற்றுவோம். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர் மீது உள்ள பாலியல் வழக்குகளை சரி செய்துவிட்டு பேசட்டும் அதுமட்டுமில்லாமல் சிவி சண்முகம் சட்டத்துறை அமைச்சரானது எல்லாருக்குமே ஆச்சரியமான ஒன்றுதான்.
வருங்கால முதல்வர் ஓபிஎஸ் தான். எடப்பாடி கட்சியிலிருந்து இப்பவும் முன்னாள் அமைச்சர்கள் 20 பேர் பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள் சீக்கிரம் அவர்கள் எல்லாம் ஒன்று சேருவார்கள் அந்த தீய சக்தியை தவிர ஒருங்கிணைப்பாளர் என்றுமே ஓபிஎஸ் தான் . ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம்
எடப்பாடியிடம் அதிக பணம் இருந்தால் ஏதாவது ஒரு தீவு வாங்கிக்கொண்டு ஜாலியாக இருக்க சொல்லுங்கள் கூறினார் அப்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தார்கள்.