• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நம்ம ஊரு திருவிழாவுக்கு அனைவரும் வாருங்கள் : முதல்வர் அழைப்பு..!!

ByA.Tamilselvan

Jan 5, 2023

சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் அனைவரும் வாருங்கள் என பதிவிட்டுள்ளார்.
சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில், தனித்த அடையாளத்தோடு கலை, பண்பாடு, இலக்கியம் என வாழ்ந்திட்ட தமிழர், பின்னாளில் இனப் பகைவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகி தங்களது அடையாளங்களை மறந்தனர். மறத்தமிழரின் மான உணர்வை பகுத்தறிவால் மீட்டெடுத்து, இன எழுச்சி பெற வைத்தது திராவிட இயக்கம். தமிழரின் பண்பாட்டை மீட்டெடுக்கும் திராவிட சிந்தனையின் மற்றுமொரு முன்னெடுப்புதான் சென்னை சங்கமம்.


சென்னை சங்கமம் – நம்ம ஊரு திருவிழா தமிழகத்தின் தலைநகரான சென்னையின் பல்வேறு இடங்களில் வரும் 13-ம் நாள் தொடங்கி 17-ம் நாள் வரையில் அரசு சார்பில் நடைபெறவிருக்கிறது. வரும் 13-ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று, சென்னை, தீவுத் திடலில் சென்னை சங்கமம்-2023 நிகழ்வை நான் தொடங்கி வைக்கிறேன். 16 இடங்கள், 60-க்கும் மேற்பட்ட கலைநிகழ்ச்சிகள், 600-க்கும் மேற்பட்ட மண்ணின் கலைஞர்களை ஒன்றிணைத்து, மீண்டும் வருகிறது சென்னை சங்கமம். பறையாட்டம் – கரகாட்டம் – மலைவாழ் மக்களின் கலைகள், இலக்கியத் திருவிழா – உணவுத் திருவிழா என உலகமே வியந்து பார்க்கும் #நம்மஊருதிருவிழா-வுக்கு அனைவரும் வாருங்கள்! சந்திப்போம்! என பதிவிட்டுள்ளார்.