• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

என் மனைவி கூட இப்படி திட்டியதில்லை.. கெஜ்ரிவாலின் சூசக கமென்ட்..

Byகாயத்ரி

Oct 7, 2022

டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி நடைபெற்று வருகிறது. டெல்லி துணை நிலை கவர்னராக வினய் குமார் சக்சேனா இருக்கிறார். இவர் கடந்த மே மாதம்தான் டெல்லி துணை நிலை கவர்னராக பொறுப்பேற்றார்.

அது முதல் அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தின் புதிய கலால் கொள்கை, மருத்துவமனை கட்டுமானம், வகுப்பறை கட்டுமான உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். கடந்த செவ்வாய்(அக்.4) அன்று பி.எஸ்.இ.எஸ். டிஸ்காம்களுக்கு ஆம் ஆத்மி அரசு வழங்கிய மின் மானியத்தில் உள்ள முறைகேடுகள் மற்றும் முரண்பாடுகள் குறித்து விசாரிக்குமாறு டெல்லி துணை நிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா தலைமை செயலாளருக்கு உத்தரவிட்டார். மேலும், 7 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். இதனால் ஆம் ஆத்மி அரசுக்கும், டெல்லி துணை நிலை கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டரில், துணைநிலை கவர்னர் சாஹிப் என்னை தினமும் திட்டும் அளவுக்கு, என் மனைவி கூட என்னை திட்டுவதில்லை. கடந்த 6 மாதங்களில் துணைநிலை கவர்னர் எனக்கு எழுதிய காதல் கடிதங்கள் அளவுக்கு என் மனைவி எனக்கு எழுதியதில்லை. துணைநிலை கவர்னர் சாஹிப், கொஞ்சம் சாந்தமாக இருங்க, உங்கள் சூப்பர் முதலாளியிடம் கொஞ்சம் நிதானமாக இருங்கள் என்று சொல்லுங்கள் என பதிவு செய்துள்ளார்.