

“திருவாரூர் முத்துவேல் கருணாநிதி” நூல் வெளியீட்டு விழா மாலை 6 மணியளவில் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை அண்ணா அறிவலாயத்திலுள்ள கலைஞர் அரங்கில், தமிழக முதலமைச்சரின் வாழ்த்துரை கொண்ட இந்நூலினை, கழக இளைஞர் அணிச் செயலாளர், உதயநிதி ஸ்டாலின் வெளியிட, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெற்றுக் கொள்கிறார். இந்நிகழ்வில் நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால், திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் வாழ்த்துரை வழங்குகின்றனர். நிகழ்ச்சியில், அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக முன்னணியினர் மற்றும் பெருமக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர்.

