ஈரோடு எஸ் கே சி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ மாணவிகள் சிலம்பம் ,கராத்தே, ஜிம்னாஸ்டிக், மல்யுத்தம் போன்ற போட்டிகளில் மண்டல அளவிலும், மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் கலந்து கொண்டு சாதனை புரிந்து வருகின்றனர்.
மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் எஸ் கார்த்தி குமார் சிலம்பம் போட்டியில் மண்டல அளவில் இரண்டாம் பரிசும்,மாநில அளவில் இரண்டாம் பரிசும், தேசிய அளவில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளார். மேலும் ஒன்றரை மணி நேரம் சிலம்பம் விளையாடி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் வழங்கிய பதக்கம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.ஏழாம் வகுப்பு படிக்கும் ஆர். யோகன் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் ஆறு பிரிவுகளில் கலந்துகொண்டு நான்கு வெள்ளி பதக்கங்களும் இரண்டு வெண்கல பதக்கங்களும் பெற்று சான்றிதழ்களும் பெற்றுள்ளார் .எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் எஸ். குரு சஞ்சய் மாநில அளவிலான கராத்தே போட்டியில் இரண்டு பிரிவுகளில் கலந்து கொண்டு இரண்டு பிரிவுகளிலும் (Kumite,Kata) முதல் பரிசு பெற்று சான்றிதழ்களும் பெற்றுள்ளார் ஏழாம் வகுப்பு படிக்கும் எஸ். கிருஷ்ண கண்ணா மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் பரிசு பெற்றுள்ளார். இவர்கள் அனைவருக்கும் பள்ளியில் பாராட்டு விழா நடத்தப்பட்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.
