• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்!

ByP.Kavitha Kumar

Jan 11, 2025

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிச.14ம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. நேற்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டி மற்றும் தங்கள் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. நாம் தமிழர் தனித்துப் போட்டி என அறிவித்தது. அதிமுக இன்னும் போட்டி குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ் போட்டியில்லை எனவும், திமுக போட்டியிடும் எனவும் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

இந்நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக கொள்கைப் பரப்பு இணைச் செயலாளரான வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார். இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.