தாம்பரம் அடுத்த திருவஞ்சேரி ஊராட்சியில் “சமத்துவ பொங்கல் விழா – 2026” வெகு விமர்சையாக நடைபெற்றது. சமத்துவம், சமூக ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் இந்த விழா பொதுமக்களின் பெரும் பங்கேற்புடன் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக ஜனா சுப்ரமணி, B.Com கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். அவருடன் இணைந்து திருவஞ்சேரி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ருக்குமணி சக்தி, திமுக நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள்
இந்த சமத்துவ பொங்கல் விழாவை சிறப்பாக நடத்தினர்.
சாதி, மதம், இன, பொருளாதார வேறுபாடுகளை கடந்து, அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து பாரம்பரிய தமிழர் திருநாளான பொங்கலை சமத்துவ பொங்கலாக கொண்டாடினர்.
வண்ண வண்ண கோலங்கள் இடப்பட்டு, உறியடிப்பு போட்டிகள் நடத்தப்பட்டன.
பொங்கல் வைத்து, தமிழ் பாரம்பரிய குரல்களுடன் “பொங்கலோ பொங்கல்” என்று
உற்சாகமாக முழங்கிய பொதுமக்கள், விழா சூழலை மகிழ்ச்சியால் நிரப்பினர்.
உறியடிப்பு மற்றும் பிற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதுடன், உறியடிப்பு போட்டியில் 1501 ரூபாய் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
திருவஞ்சேரி ஊராட்சியில் நடைபெற்ற இந்த சமத்துவ பொங்கல் விழா – 2026,
மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் தமிழ் பண்பாட்டின் பெருமையை மீண்டும் நினைவூட்டும் வகையில் மிகுந்த உற்சாகத்துடன் நிறைவடைந்தது.





