• Sun. Jun 28th, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

உள்ளாட்சி தேர்தலில் விஜய் அண்ணனின் வேட்பாளர்களை வெற்றி பெற வையுங்கள்-அமைச்சர்..,

ByKalamegam Viswanathan

Jun 28, 2026

விசேஷம் என்றால் கண்டிப்பாக பத்திரிக்கை கொடுத்து அனுப்ப வேண்டும் என மக்களிடம் கண்டிப்புடன் சொன்ன அமைச்சர்.-அமைச்சரிடம் குழந்தைகளை கொடுத்து புகைப்படம் எடுத்துக்கொண்ட மக்கள்.

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் மற்றும் திருப்பரங்குன்றம் வாக்காளருக்கு நன்றி தெரிவிக்கும் விழா திருப்பரங்குன்றம் மேலக்குயில் குடியில் தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சருக்கு தாவக்கா நிர்வாகிகள் ஆள் உயர மாலை அணிவித்து வேல் பரிசளித்தனர். நிகழ்ச்சியில் தாய் மற்றும் தந்தை இழந்த பள்ளி மாணாக்கர்கள் 25 பேருக்கு அமைச்சர் உதவி தொகை வழங்கினார். அமைச்சரை வரவேற்று பேசிய சிறுமி மாமா என்று அழைத்ததோடு “பயமா இருக்கா இன்னும் பயங்கரமாக இருக்கும்” என முதல்வரின் திரைப்பட வசனங்களை பேசினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் அமைச்சர் பேசும்போது: மழையையும் பொருட்படுத்தாமல் எனக்காக நீங்கள் வந்திருப்பது சந்தோசம். தேர்தலுக்கு முன்னாடி எப்படி இருந்தமோ அப்படித்தான் இப்போதும் இருப்போம்.

போன வாரம் சட்டசபையில் அண்ணன் விஜய் அவர்கள் பேசியிருப்பதை பார்த்திருப்பீர்கள் பார்ட்டி ஃபண்டு என்றவுடன் ஒரே கோபம் நாங்களெல்லாம் உத்தமர்கள் என உதயநிதி எல்லோரும் கோபப்பட்டு எழுந்து சென்று விட்டனர்.
அவர்கள் போன பின்பு தான் தெரியுது எல்லோரும் புகார் அளிக்கிறார்கள் கட்சி நிதி கொடுத்தோம் என்று.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டுள்ளது வருடா வருடம் 400 கோடி பள்ளி கல்வித்துறையில் லஞ்சம் வாங்கியுள்ளார்கள் அதில் வழக்கு பதிவு செய்து நான்கு பேரை தேடி வருகிறார்கள். மூன்று நாட்களுக்கு முன்னாடி வெள்ளை அறிக்கை வெளியிட்டோம் நேற்று இருந்து எனக்கு கட்சி நிதி வாங்கினார்கள் என்று புகார் வந்து கொண்டே இருக்கிறது. ஒரு மெகாவட்டுக்கு 20 முதல் 25 லட்சம் பெற்றுக் கொண்டு வேலையை முடித்து தரவில்லை என்று. கட்சி நிதி வாங்கினோம் என்று சொன்னீர்கள் ஆதாரம் எங்கே என்று கேட்டார் உதயநிதி ஒவ்வொரு நாளும் ஆதாரத்தை திரட்டி கொண்டுள்ளோம்.

அது காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் முறையாக நடவடிக்கை எடுப்பார்கள். எல்லா இடத்திலும் லஞ்சம் லாவண்யம் குறைந்துவிட்டது எங்கேயாவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் தாராளமாக எங்களிடம் சொல்லுங்கள். எந்த அலுவலகத்திலும் லஞ்சம் கேட்க மாட்டார்கள் சில ஆண்டுக்குள் அனைத்தையும் சரி செய்து விடுவோம் இனி வரும் நாட்கள் சிறப்பாக இருக்கும்.

உள்ளாட்சி தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரும் திமுக அதிமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அங்கங்கே இருக்கிறார்கள். அவர்கள் கொள்ளையடித்து விட்டார்கள் என்றால் அதற்கு பயங்கர கோபம், தைரியம் இருந்தால் திமுக கவுன்சிலர்கள் சொத்து பட்டியலை வெளியிடுங்கள் இவர்கள் அரசியலில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் எங்களுடைய தம்பிகள் உள்ளாட்சித் தேர்தல் போட்டியிடுவார்கள் 20 வருடமாக நலத்திட்ட உதவி செய்துள்ளார்கள் கடைசி வரை உங்களிடம் தான் இருப்பார்கள். உங்களுடைய வேட்பாளருக்கு ஆதரவு கொடுங்கள் உள்ளாட்சித் தேர்தல் அனைத்து தவெக வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும்.

மதுரையில் கவுன்சிலர் இருப்பதே மக்கள் மறந்து விட்டனர் அந்த லட்சணத்தில் இருக்கிறது. சாலையோர கடை வியாபாரிகளிடம் இன்னும் கவுன்சிலர்கள் வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள் யாருக்கும் காசு கொடுக்காதீர்கள் இது உங்க அரசு.‌ உள்ளாட்சி தேர்தலில் விஜய் அண்ணனின் வேட்பாளர்களை வெற்றி பெற வையுங்கள்

இனி அடிக்கடி வருவோம் விசேஷம் என்றால் கண்டிப்பாக பத்திரிக்கை கொடுக்க வேண்டும் என கூட்டத்தைப் பார்த்து கண்டிப்புடன் சொன்னார் அமைச்சர் பின்னர் கூட்டத்தில் மக்களை பார்த்து என்னப்பா பத்திரிகை கொடுத்துவிடுவாயா? என்று கேட்டார் இதுவரை ஒரு பத்திரிக்கை வரவில்லை கொடுத்து அனுப்பி விடுங்கள் அலுவலகம் வீடு திருநகரில் மாற்றிவிட்டோம் எதனாலும் சொல்லுங்கள் எந்த கவலையும் வேண்டாம் நாங்க இருக்கோம் என்றார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்ற அமைச்சரிடம் கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் தங்களது குழந்தையை கொடுத்து செல்பி எடுத்துக் கொண்டனர். அமைச்சரும் ஒவ்வொரு குழந்தைகளாக கையில் தூக்கி வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.