• Thu. Apr 25th, 2024

ஏமன் நாட்டில் இருந்து மதுரை வந்த பொறியியல் பட்டதாரி கைது..!

Byகுமார்

Dec 27, 2021

இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்குச் சென்று வந்த மதுரை பொறியியல் பட்டாதாரி வாலிபர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் இவரது மகன் உதய குமார் (வயது 29). பொறியியல் பட்டதாரியான இவர், கடந்த 2018 ஆம் வருடம் மதுரையில் இருந்து விமானம் மூலம் துபாய்க்குச் சென்று துபாயிலிருந்து ஜோர்டான் நாட்டிற்கு சென்றார். அங்கிருந்து டூரிஸ்ட் விசா மூலம் ஏமன் நாட்டிற்கு சென்று பிளான்ட் ஆபரேட்டர் ஆக பணிபுரிந்துள்ளார்.


மத்திய அரசு விதிமுறைகளின்படி, தடைசெய்யப்பட்ட அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் நாட்டிற்கு இந்தியர்கள் செல்வதை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், அங்கு சென்று வருபவர்களை கைது செய்து கண்காணிக்கும் பணி நடைமுறையில் உள்ளது. தடையை மீறி உதயகுமார் சென்று அங்கு 3 வருடங்கள் பணி புரிந்தவர் என்பதனை தொடர்ந்து உதயகுமாரை குடியேற்றத் துறை அதிகாரிகள் மற்றும் அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து தடை செய்யப்பட்ட நாட்டிற்கு சென்றது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *