• Fri. May 3rd, 2024

அமலாக்கத்துறை அதிகாரி லஞ்ச வழக்கு – திண்டுக்கல் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி பேட்டி…

ByPalani kumar

Dec 2, 2023

அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கிய வழக்கில் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் சம்பந்தம் உண்டு. அமலாக்க துறையை வைத்து தேர்தலுக்காக பணம் வசூலிக்கும் வேலையில் பாஜக ஈடுபட்டு வருகிறது.

திண்டுக்கல்லில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று 02.12. 23 திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வி பாலபாரதி செய்தியாளர்களிடம் பேசுகையில் :-
வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேவையான பணத்தை வசூலிப்பதற்காக பாஜக அமலாக்க துறையை தற்பொழுது பயன்படுத்தி வருகிறது.
அமலாக்கத்துறை மத்திய அரசின் அடியாள் துறையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாரை அனுமதி அளிக்காமல் துணை ராணுவத்தை அலுவலகம் முன்பு கொண்டு வந்து நிறுத்தியது என்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. காவல்துறையினர் சோதனை செய்ய அனுமதி அளிக்க முடியாது என கூறுவதற்கு இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது. விசாரணை செய்ய காவல்துறையினர் வருகை தந்தால் அவர்களை அனுமதிப்பது தான் ஜனநாயக முறையாகும் ஆனால் அனுமதிக்க முடியாது என்பது என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது இது அராஜக போக்காகும்.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படக்கூடிய அமலாக்கத்துறை, பிரதமர் அலுவலகத்தில் இருந்த வந்த உத்தரவின் பேரில்தான் நான் உங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன் என அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவிடம் பேசியுள்ளார். உள்துறை அமைச்சகத்திற்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு அமலாக்கத்துறை அதிகாரி எப்படி இவ்வாறு பேச முடியும் ஆகவே உள்துறை அமைச்சகத்திற்கும் இந்த சம்பவத்திற்கும் சம்பந்தம் உள்ளது ஆகவே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தமிழக காவல்துறை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது சாதாரண விஷயம் இதனை அரசியல் ஆக்காதீர்கள் லஞ்சம் வாங்குவது என்பது அனைத்து துறைகளிலும் உள்ளது. என பொதுப்படையாக கூறி வருகிறார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை .மத்திய அரசையும் அமலாக்கதுறையும் காப்பாற்றும் விதமாக பேசி வருகிறார். மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதை நியாயப்படுத்தும் வகையில் பேசி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தேர்தல் செலவுக்காக அமலாக்க துறையை பாஜக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது தான் உண்மை.மேலும் மாநில அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *