• Mon. Apr 29th, 2024

மதுரை பொன்மேனி தலைமை பணிமனை முன்பு ஊழியர்கள் மறியல் போராட்டம்..!

ByKalamegam Viswanathan

Jan 10, 2024

அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில் மதுரை பொன்மேனி தலைமை பணிமனை முன்பு ஊழியர்கள் மறியல் போராட்டம் செய்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
15 ஆவது ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்க போராட்டம் இரண்டாவது நாளாக இன்று தொடர்கிறது. தொழிற்சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து நேற்று முதல் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அரசுக்கு ஆதரவாக செயல்படும் தொழில் சங்கத்தைச் சார்ந்த தொழிலாளர்களை வைத்தும், தற்காலிகமாக எடுக்கப்பட்ட ஓட்டுநர் நடத்துனர் வைத்தும் பேருந்துகளை இயக்கி வரும் சூழ்நிலையில், சிஐடியு எஐடியூசி. டிடிஎஸ்எப், எச் எம்எஸ், உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்று மதுரை பொன்மேனி தலைமை போக்குவரத்து பணிமனை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலையில் அமர்ந்து போராடினர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இதையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிகழ்ச்சியின் போது மதிப்பிற்குரிய துணை மேயர் .ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் க.சிவகுமார், பொது சுகாதாரகுழு தலைவர் .பெ.மாரிச்செல்வன், கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *