விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள போஸ் காலனியில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாபெரும் மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது .அதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திரபாலாஜி கபடி போட்டியில் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களை கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் அதிமுக ஆட்சியில் இளைஞர் நலனில் அக்கறை கொண்டு விளையாட்டுத் திடல்கள், விளையாட்டு உபகரணங்கள், பல்வேறு மானியங்கள் வழங்கப்பட்டது.

.அதனை பயன்படுத்தி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், இளைஞிகள் மாவட்ட அளவிலான போட்டிகளிலும், மாநில அளவிலான போட்டியிலும் ,பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளனர் என கூறினார். மின்னொளி கபடி போட்டிக்கான ஏற்பாடுகளை முக்குலத்தோர் புலிப்படையினர் செய்திருந்தனர்.















; ?>)
; ?>)
; ?>)