• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தேர்தல் அப்டேட்ஸ்!..

Byமதி

Oct 12, 2021

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் 140 இடங்களுக்கான மாவட்ட கவுன்சிலர்கள் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 2 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

மேலும் 1381 இடங்களுக்கான ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி 5 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

மரக்காணம் வாக்கு எண்ணும் மையத்தில் காவல்துறையினருக்கும், முகவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் முடிந்தது. இதனால் வாக்கு எண்ணும் பணி சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் தபால் வாக்குப் பெட்டியின் சாவி தொலைந்தால், சுத்தியல் மூலம் வாக்குப்பெட்டியின் பூட்டு உடைத்து தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.

பரமக்குடியிலும், ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, வாக்கு பெட்டியின் சாவி மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே அதிகாரிகளால் சுத்தியல் மூலம் வாக்கு பெட்டி உடைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஸ்ரீ கிருஷ்ணா பொறியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் ஊராட்சி ஒன்றியத்தில் காலை உணவு வழங்கவில்லை. இதனால் அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணி 9.15 மணி வரை துவக்கப்படாமல் இருந்தனர். 10.30 மணி வரையிலும் அவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவில்லை. இதனால் அறைகளை விட்டு வாக்கு எண்ணும் அலுவலர்கள் வெளியே வந்தனர்.