• Sat. Jul 11th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ரூ.96 ஆயிரத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர்

ஒட்டன்சத்திரம் அருகே மாடு வாங்குவதற்காக கொண்டு வந்த ரூ. 96 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வேடசந்தூர் சாலையில் கேதையறும்பு மின்வாரியம் அலுவலகம் முன்பு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்‌.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின்போது குமரேசன் என்பவர் ரூ.96,500 பணம் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். குமரேசன் மாடு வாங்குவதற்காக பணத்தைக் கொண்டு வந்ததாக கூறினார்.

உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, ஒட்டன்சத்திரம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.