• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கோவையில் கிரிக்கெட் விளையாடி மாஸ் காட்டிய எஸ்.பி வேலுமணி!

BySeenu

Sep 21, 2026

கோவை, மதுக்கரை அருகே நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி வேலுமணி, பேட்டிங் செய்து பந்துகளை நான்கு மற்றும் ஆறு ரன்களுக்குப் பறக்கவிட்ட சம்பவம் தொண்டர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.

கோவை, மதுக்கரை அருகே ‘தம்சப் கிரிக்கெட் கிளப்’ (Thumbs Up Cricket Club) சார்பில் கிரிக்கெட் தொடர் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டிக்குப் பிறகு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

​இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்குப் பரிசுகளையும் கோப்பைகளையும் வழங்கிப் பாராட்டினார்.

பரிசளிப்பு விழாவிற்குப் பிறகு, விளையாட்டு வீரர்களின் வேண்டுகோளை ஏற்றுத் திடீரெனக் கையில் பேட்டை பிடித்துக் களமிறங்கினார் எஸ்.பி வேலுமணி.
​பந்து வீச்சாளர்கள் (Bowlers) மிக வேகமாகவும், துல்லியமாகவும் வீசிய பந்துகளை எவ்விதத் தயக்கமும் இன்றி அசால்ட்டாக எதிர்கொண்ட அவர், பந்துகளை நாலாபுறமும் ஃபோர் (Four) மற்றும் சிக்ஸர்களாக (Six) அடித்துத் துவம்சம் செய்தார்.

எந்தப் பாலைப் போட்டாலும் அதை எல்லைக் கோட்டிற்கு வெளியே விரட்டிய அவரது அதிரடி ஆட்டத்தைக் கண்டு அங்கு இருந்த இளைஞர்களும், தொண்டர்களும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.

​அரசியல் களத்தில் சுறுசுறுப்பாக இயங்கி வரும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, கிரிக்கெட் மைதானத்திலும் இளம் வீரர்களுக்கு இணையான ஆற்றலோடு பேட்டிங் செய்து மாஸ் காட்டிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.