
அரியலூரிலிருந்து, ஜெயங்கொண்டம் நோக்கி சென்ற போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் வாகனத்தை, அஸ்தினாபுரம் அருகே சாலையில் சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர், வாகனத்தை ஆய்வுக்கு உட்படுத்துவதாக கூறினர்.
அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சோதனைக்கு பின் ஜெயங்கொண்டம் புறப்பட்டுச் சென்றார்.

