வத்தலகுண்டு அருகே கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிருக்கு போராடி தத்தளித்த முதியவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

திண்டுக்கல், வத்தலகுண்டு அடுத்த பழைய வத்தலகுண்டு அருகே சாந்தி என்பவரை தென்னந்தோப்பில் உள்ள கிணற்றில் உள்ள மோட்டாரை சரி செய்வதற்காக கிணற்றுக்குள் இறங்கிய ராஜாமணி(65) என்பவர் நிலைத்தடுமாறி கிணற்றுக்குள் விழுந்து மேலே வர பிடிமானங்கள் இல்லாததால் உயிருக்கு போராடி தத்தளித்துக் கொண்டு கூச்சலிட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வத்தலகுண்டு தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் போராடி மீட்பு வலை மூலம் கிணற்றுக்குள் உயிருக்கு போராடி தத்தளித்து கொண்டிருந்தவரை உயிருடன் மீட்டனர்.