• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வாகன சோதனையில் எட்டு லட்சம் பறிமுதல்!

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள பழனியூர் பேருந்து நிறுத்தத்தில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த பாலாஜி என்ற நபரிடம் வாகனசோதனை செய்ததில் அவரிடமிருந்து கணக்கில் வராத ரூபாய் 8 லட்சம் பணத்தை, தனி வட்டாட்சியர் வாசுதேவன், உதவி ஆய்வாளர் தென்னரசு, தலைமை காவலர்கள் கார்த்திகேயன், மஞ்சுளாதேவி ஆகியோர் பறிமுதல் செய்து கோட்டூர் பேரூராட்சியில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் 8 லட்சம் பணம் ஒப்படைத்தனர்!