• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

அரசுப் பள்ளியில் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா

ByN.Ravi

Jul 6, 2024

மதுரை மாவட்டம், விளாங்குடி பகுதியில் அமைந்துள்ள மேற்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், சர்வதேச சட்ட உரிமைகள், மனித நீதி சபை மற்றும் அனைத்து மகளிர் மேம்பாட்டு கழகம் சார்பில், கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா,
மாவட்டத் தலைவர் சுரேஷ் பாபு தலைமையில் நடைபெற்றது.
இதில், 50 க்கும் மேற்பட்ட எல்.கே. ஜி. யு.கே.ஜி. மாணவ, மாணவிகளுக்கு பேக், நோட், பென்சில், ஸ்கேல், ரப்பர் போன்றவைகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், எட்வர்ட், கிருஷ்ண மூர்த்தி மற்றும் பாண்டீஸ்வரி ஆகியோர் பேக், நோட்புக் மற்றும் எழுதும் பொருள்களை நன்கொடையாக வழங்கினர்.
இதில், சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை மாவட்டச் செயலாளர் ரவிச்
சந்திர பாண்டியன் முன்னிலை வகித்தார்.
மேலும், உறுப்பினர்கள் பாண்டியன், மணிகண்ட ராஜா, அனைத்து மகளிர் மேம்பாட்டு கழக மாநில மகளிர் அணித்தலைவி மஞ்சுளா, மாநில இணைச்செயலாளர் செல்வி,
மாநில ஒருங்கிணைப்பாளர் தங்கதுரை, மதுரை மாவட்டமகளிர் அணி தலைவி விஜய
லெக்ஷ்மி, துணைத் தலைவி மீனா குமாரி, திண்டுக்கல் மாவட்டத் தலைவி, விஜய
லெக்ஷ்மி, நிர்வாகி அமுதா, பள்ளித் தலைமை ஆசிரியர் சகாய பாத்திமா மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து
கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.