• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள்..,

ByP.Thangapandi

Jul 27, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இயங்கி வரும் நாடார் சரஸ்வதி துவக்கப்பள்ளியில் 800 க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.,

இந்த பள்ளியில் ஜூலை 15 காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கல்வி வளர்ச்சி நாளாக அனுசரித்தனர்.,

இந்த விழாவில் மாணவ மாணவிகள் காமராஜர் குறித்து பேச்சு போட்டி மற்றும் மாறுவேட போட்டி, கட்டுரை போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்., போட்டியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், வட்டார கல்வி அலுவலர் தேவி இணைந்து பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்.,

தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.,