திண்டுக்கல்லில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி கூட்டம் துவங்கியது முதல் பதட்டமாக இருந்ததால் சங்க நிர்வாகிகளை பேசவிடாததாலும் நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர்.

திண்டுக்கல் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் வர்த்தக சங்கம் மற்றும் தொழில் வர்த்தக சங்கம் விவசாய சங்கம் உட்பட 17 சங்கங்கள் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், செங்கோட்டையன் கொடுத்த நெருக்கடி காரணமாக அவசர அவசரமாக முடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு நிர்வாகிகள் தள்ளப்பட்டனர். இதையடுத்து திண்டுக்கல் சீனிவாசன் கூறும் போது, சங்க நிர்வாகிகள் சுருக்கமாக பேசுமாறு கூட்டம் தொடங்கும் முன்பே எச்சரித்தது அனைவரையும் எரிச்சல் அடையச் செய்தது. பக்கம் பக்கமாக கூட்டத்தில் பேசுவதற்கு தயாரித்து வந்திருந்த சங்க நிர்வாகிகள் அதிருப்தி அடைந்தனர்.
பேருக்கு 4 சங்க நிர்வாகிகளை மட்டும் பேச அனுமதித்து விட்டு, மற்றவர்களிடம் மனு வாங்கியது வந்திருந்த சங்க நிர்வாகிகளை அதிருப்தி அடையச் செய்தது. குறிப்பாக தனியார் பள்ளிகள் சங்கம், வேடசந்தூர் விவசாய சங்கம், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம், சிறு தொழில் வணிகர்கள் சங்கம் உட்பட சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் இருந்து வெளியேறினர். இது குறித்து வெளியேறிய சங்க நிர்வாகிகள் கூறியதாவது: எதிர்க்கட்சித் தலைவராக இருந்து எங்கள் குறைகளை கேட்பார் என்று நாங்கள் வந்தோம்.

ஆனால் அவர் கட்சி நிர்வாகிகள் குறைகளை கேட்கவே நேரம் இல்லாமல் கூட்டத்திற்கு தாமதமாக வந்தார். மேலும் கட்சி நிர்வாகிகளும் அவரும் ஒரு பதட்டத்துடனே இருந்தனர். கூட்டம் துவங்கியதிலிருந்து எடப்பாடி பழனிச்சாமி யாரிடமோ போனில் பேசி விளக்கம் கொடுத்து கொண்டே இருந்தார். இதனால் அவரால் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசியதை கவனிக்க முடியவில்லை, எங்கள் கருத்துக்களையும் கேட்க முடியவில்லை. போகாத ஊருக்கு வழி சொல்வது போல கூட்டம் முடிந்து விட்டது என்று வேதனைப்பட்டனர்.













; ?>)
; ?>)
; ?>)