• Wed. Dec 11th, 2024

குரங்கு அம்மை எதிரொலி…. சுகாதாரத்துறையின் முக்கிய அறிவிப்பு..

Byகாயத்ரி

Jun 1, 2022

உலக நாடுகளில் குரங்கு அம்மை தீவிரமாக பரவி வருவதால் தமிழக விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை கண்காணிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட நாடுகளில் குரங்கு அம்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இந்த நாடுகளில் இருந்து சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தொடர் காய்ச்சல், உடல் வலி,தோல் அலர்ஜி மற்றும் அம்மை கொப்புளங்கள் அறிகுறிகள் இருந்தால் அவர்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.