• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாபர் மசூதி இடிப்பு தின எதிரொலி.. மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் அதிரடி சோதனை..!

Byகுமார்

Dec 6, 2021

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆண்டுதோறும் டிசம்பர் 6 ஆம் தேதி நாடு முழுவதும் அசம்பாவிதம் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பொதுமக்கள் அதிகம் கூடும் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலபடுத்தப்படும்.

அந்த வகையில் மதுரை ரெயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் மற்றும் இரயில்வே இருப்பு பாதை காவல் ஆய்வாளர்கள் தலைமையில் மோப்ப நாய் உதவியுடன் ரயில்கள் மற்றும் ரயில்வே நடைபாதை, காத்திருப்பு அறை, பார்சல் அலுவலகங்கள், பயணிகளின் உடமைகள் மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியது பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.