அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பப்புவா நியூகினியாவில் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 95 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டஇந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.8ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து, தூங்கிக் கொண்டிருந்த மக்கள் வீட்டில் இருந்து வெளியேறி சாலையில் தஞ்சமடைந்துள்ளனர். சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை.