• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகி உள்ளது.

இன்று அதிகாலை 4.17 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிமீ தொலைவில் ஏற்பட்டது என தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நில அதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளநிலையில், பெரும்பாலான மக்களால் உணரப்படவில்லை. தற்போது இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.