திண்டுக்கல் அருகே உள்ள கே.கீரனூர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
திண்டுக்கல் ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தயம் அருகே கே.கீரனூர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் கூறிய நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 10க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியேறி சாலையில் மக்கள் தஞ்சம் அடைந்தனர்.