நேபாளத்தில் ரிக்டர் 7.1 அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. மேலும் பீகார், அசாமிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 எனப் பதிவாகியிருக்கிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு (யுஎஸ்ஜிஎஸ்) படி, நிலநடுக்கம் இன்று காலை 6:35 மணிக்கு, நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் உள்ள லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் நிகழ்ந்திருக்கிறது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பீகார், அசாம் உள்ளிட்ட பலப் பகுதிகளில் உணரப்பட்டிருக்கிறது. நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பீகாரின் சிலப் பகுதிகளில் மக்கள் சாலையில் தஞ்சமடைந்திருக்கிறார்கள். இதுவரை சேதாரங்கள் குறித்த எந்தத் தகவலும் இல்லை.