• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

விருதுநகரில் வாகன ஓட்டிகளைக் காக்கவந்த இ-பைக்..!

Byவிஷா

Mar 8, 2023

விருதுநகரில வாகன ஓட்டிகளைக் காக்க வந்த விடிவெள்ளியாக, மார்க்கெட்டில் புதியதாக இ-பைக் அறிமுகமாகி உள்ளது.
பைக் வாங்க லோன் வாங்கிய காலம் போய் இனி பெட்ரோல் போட லோன் வாங்கினாலும் ஆச்சரியமில்லை என வாகன ஓட்டிகள் நொந்து கொண்டிருக்கும் நிலையில், வாகன ஓட்டிகளை காக்க வந்த விடிவெள்ளியாய் மார்க்கெட்டில் இறங்கியுள்ளது இ- பைக்.
இ- பைக் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ள ஆம்பியர் நிறுவனம் பல்வேறு சிறப்பம்சங்களுடன் மேக்னஸ் இஎக்ஸ் என்ற இ-பைக்கை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. வழக்கமாக இ-பைக்குகள் சத்தமின்றி இயங்கக் கூடியவை. கார் போல சாவி போட்டவுடன் ஆன் ஆகிவிடும், சத்தம் கேட்காது. பழக்கத்தில் விளையாட்டு தனமாக சாவியை போட்டு விட்டு வண்டியை முறுக்கினால், வண்டி நகர்ந்து விபத்து ஏற்படலாம். அதை தவிர்க்க தற்போது பெட்ரோல் பைக்குகளை போல செல்ப் ஸ்டார்ட் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் நாம் வண்டியை சிரமப்பட்டு பின்னோக்கி தள்ளுவதற்கு பதில் ரிவர்ஸ் மூட் கொடுக்கப்பட்டுள்ளது அதன் மூலம் எளிமையாக வண்டியை பின்னோக்கி நகர்த்தலாம்.
மேலும் மின்கசிவு மூலம் விபத்து ஏற்படுவதை தவிர்க்க வாகனத்தில் ஆட்டோ சென்சார் பொருத்தியுள்ளனர். இதன் மூலம் வாகனத்தில் எதாவது பிரச்னை என்றால் உடனடியாக நின்றுவிடும்படி செட் செய்துள்ளனர். இதே போன்று வேகம் போன்றவற்றில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆம்பியர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த எலக்ட்ரிக் பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ வரை ஓடும் என்று கூறப்படும் நிலையில், பேட்டரியை தனியாக எடுத்து சார்ஜ் செய்யும் வசதியும் இருப்பதால் அடுக்குமாடியில் குடியிருப்போர் வண்டியை எங்கு வைத்து சார்ஜ் செய்வது என கவலைபட தேவையில்லை.
இதுபோக எலக்ட்ரிக் பைக்குகளுக்கு அரசின் மானியமாக 34,500 ரூபாய் கிடைக்கிறது. அதே போல் பேட்டரியை மட்டும் சரிவர பராமரிப்பு செய்து வந்தாலே வண்டி நீண்ட நாள் உழைக்கும் என்று கூறப்படுகிறது.