• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தசரா பண்டிகை… கூடுதல் பேருந்துகள் இயக்கம்..

ByA.Tamilselvan

Sep 20, 2022

போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவுறுத்தலின்படி, குலசேரப் பட்டினத்தில் நடைபெறும் தசரா பண்டிகையை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், அக்டோபர் 1ம் தேதி முதல் 4ம் தேதி வரை, சென்னையிலிருந்து திருச்செந்தூர், குலசேரப் பட்டினத்திற்கும் மற்றும் கோயம்புத்தூரிலிருந்து திருச்செந்தூர், குலசேரப் பட்டினத்திற்கும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பண்டிகை முடிந்து திரும்பிட ஏதுவாக, 06.10.2022 முதல் 10.10.2022 வரை கூடுதல் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து மேற்படி ஊர்களுக்கு செல்லவும் மற்றும் அங்கிருந்து பயணிகள் திரும்பும் வகையில் பயணம் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்து வசதியினை பயணிகள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.