

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கிழக்கு எல்லை பகுதியான குமரி மாவட்டத்தில், அன்று நீர்வழி போக்குவரத்து நடந்த மணக்கூடியான் கால்வாயில் படகு மூலம் பொருட்கள் போக்குவரத்து நடைபெற்ற நீர் தடத்தின் கடைசி பகுதி மணக்கூடியான் கால்வாய், அந்த நாட்களில் திருவனந்தபுரத்திலிருந்து சுசீந்திரத்தில் உள்ள இந்த மாவட்டத்தில் புகழ் பெற்ற தாணுமாலையன் சுவாமி கோவிலுக்கு பூஜைக்கு தேவையான பொருட்கள் அந்த காலத்தில் மணக்கூடி கால்வாய் வழியாக கொண்டு வந்ததை, சுசீந்திரம் பகுதியில் வாழ்கிற பல முதியவர்கள் நினைவு கூர்ந்தார்கள்.
குமரி, கேரள மாநிலங்களின் இடையே சாலைப் போக்குவரத்து அதிகமான நிலையில், நீர் வழி காலப்போக்கில் முழுவதுமாக தடை பட்டு போனதுடன் நீர் தடங்கள் பல இடங்களில் மண் மூடி போனது மட்டுமே அல்ல, நில அக்கிரமப்பு என பல்வேறு நிலைகளில் நீர் வழி போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டு போய் பல ஆண்டுகள் கடந்து போன நிலையில், சுசீந்திரம் பேரூராட்சி நிர்வாகத்திடம் கடந்த பல்லாண்டுகளாக அந்த பகுதி மக்களின் கோரிக்கை மணக்கூடியான் கால்வாயை தூர்வாரி சுத்தப்படுத்த வேண்டும் என்பதே, சுசீந்திரம் பேரூராட்சி தலைவி அனுசுயா மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் மத்தியில் அரசியல் பேதம் இன்றி. பேரூராட்சி பொது நிதியில் இருந்து ரூ.15லட்சம் மதிப்பீட்டில் தூய்மை படுத்தும் பணி இன்று(பெப்ரவரி_23) தொடங்கியது.
சுசீந்திரம் பேரூராட்சி எடுத்துள்ள இந்த பொது கோரிக்கையை செயல் படுத்தும் பணியை கட்சி பேதமின்றி அனைவரும் ஒற்றுமையாக ஒன்று பட்டுள்ளார்கள். நிகழ்வில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய திமுக செயலாளர் பாபு, அகஸ்தீஸ்வரம் ஒன்றிய மதிமுக செயலாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் செயல் அலுவலர் பங்கு பெற்றனர்.

