தமிழக முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமனின் 21_வது ஆண்டு நினைவு தினத்தில் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் பங்கேற்று மரியாதை.
தமிழக முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் திருமதி லூர்தம்மாள் சைமன் அவர்களின் 21-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இன்று குளச்சல் குமரி மாவட்ட விசை படகு மீன்பிடிப்பவர் நலச் சங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள லூர்தம்மாள் திருஉருவ சிலைக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் K.T.உதயம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஆரோக்யராஜ், மாநில பொதுகுழு உறுப்பினர் யூசுப்கான், தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான், வட்டார தலைவர்கள் ஜெயசிங், முருகேசன், திங்கள்நகர் பேரூராட்சி தலைவர் சுமன், மீனவர் காங்கிரஸ் முன்னாள் மாநில துணை தலைவர் பிரான்சிஸ், செயலாளர் ஜெறோம், குமரி கிழக்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜோசப் மணி மற்றும் குமரி மாவட்ட விசைபடகு மற்றும் மீன்பிடிப்போர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.