• Sat. Mar 22nd, 2025

குமரி மாவட்டத்தில் அதிமுகவினர் கொண்டாடிய ஜெயலலிதாவின் 76_வது பிறந்த நாள் விழா

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு முக்கிய சந்திப்புகளில்
அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டு அதிமுகவினர் கொண்டாடிய
ஜெயலலிதாவின் 76_வது பிறந்த நாள் விழா.

குமரி மாவட்டத்தில் உள்ள 6சட்டமன்ற தொகுதிகளில், கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி அதிமுக உறுப்பினர் தளவாய் சுந்தரத்தின் ஆலோசனை படி அகஸ்தீசுவரம் தாலுகாவில் பல்வேறு பகுதிகளில், ஜெயலலிதாவின் படம் அலங்காரம் செய்து வைக்கப்பட்டதுடன் மலர் தூவி இனிப்பு கொடுத்தது. ஜெயலலிதாவின் பிறந்த நாளை அதிமுகவினர் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர்.

கன்னியாகுமரி திருவனந்தபரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொட்டாரம் சந்திப்பில் உள்ள பெரும் தலைவர் காமராஜர் சிலை முன் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தின் முன் நடைபெற்ற பிறந்த நாள் நிகழ்வில். பேரூர் செயலாளர் ஆடிட்டர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற விழாவில், விவசாய அணி செயலாளர் முனைவர் சி பாலமுருகன், தெற்கு ஒன்றிய செயலாளர் தினேஷ், அகஸ்தீசுவரம் பேரூர் செயலாளர் சிவபாலன் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற ஜெயலலிதாவின் 76பிறந்த நாளில் அனைவருக்கும் இனிப்பு வழங்கியும் , ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவியும் கொண்டாடினார்கள்.