• Sun. May 5th, 2024

பழங்குடியின மாணவிகள் பள்ளி செல்ல மாவட்ட நிர்வாகம் நவீன படகு.., ஆட்சியர் ஸ்ரீதர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்…

குமரி மாவட்டம் திருவட்டார் தாலூக்காவில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேற்று முதல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பல்வேறு அரசு அலுவலகங்கள் பள்ளிக்கூடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று காலை பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட மலைவாழ் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கு அணை வழியாக பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக 3 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் இலவச படகு சேவையை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதேபோல் குலசேகரம் அருகே செருப்பாலூர் அரசு தொடக்கபள்ளியில் செயல்படுத்தபட்டுவரும் காலை உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு உணவு தயார் செய்யபடுவதை ஆய்வு செய்ததுடன் மாணவர்களுக்கு வழங்கபடும் உணவை தானும் உண்டார். தொடர்ந்து பேச்சிப்பாறையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அளித்த கூறுகையில்..,
பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட 7க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்களை பேச்சிப்பாறை அணை வழியாக படகில் இவலசமாக அழைத்து வர வேண்டுமென்ற பழங்குடியின மக்களின் கோரிக்கையையடுத்து திருவட்டார் ஊராட்சி ஒன்றியம் சார்பில் 3லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வாங்கபட்ட புதிய படகு சேவையை மாணவர்களுக்காக துவக்கி வைக்கபட்டது. தனியார் படகுகள் 25ரூபாய் கட்டணம் வசூலிக்கபடும் நிலையில் இந்த இவலச படகு சேவை மாணவர்களுக்கும் அவசர மருத்துவ தேவைக்கும் பயனுள்ளதாக அமையும் பேச்சிப்பாறை அணையை தூரூவாரவதற்காக தனியார் நிறுவனமான வேப்கோஸ் நிறுவனத்தின் உதவியுடன் காலநிலைக்கேற்ப விரைவில் ஆய்வுகள் மேற்கொள்ளபட்டு அணை தூர்வார நடவடிக்கை எடுக்கபடும் பருவநிலைநிலை பிரச்சினைகளால் மாவட்டத்தில் நான்குவழி சாவை பணிகளில் ஏற்பட்ட மந்தம் சரி செய்யபட்டு பணிகள் தூரிதபடுத்தபட்டுள்ளது. சில பகுதிகளில் மண்தட்டுபாடு உள்ளதை கண்டறிந்து தேவைக்கேற்ப்ப மண் கிடைக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. நான்கு வழி சாலைக்கு நலம் கொடுத்தவர்களுக்கான இழப்பீடு குறித்து நீதிமன்ற வழக்கு நடைமுறையில் உள்ளதால் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் முதற்கட்டமாக சிற்றார் அணையில் சுற்றுலா படகு சவாரி திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. அடுத்தபடியாக பேச்சிப்பாறை அணையில் சுற்றுலாதிட்டம் செயல்படுத்தபடும் எனவும், மலைவாழ் மக்களின் உணவு வகைகள் கைவினை பொருட்கள் விற்பனையை ஊக்குவித்து வாழ்வாதாரத்தை உயர்த்த பகுதிநேர கடைகள் செயல்படுத்த இடம் தேர்வு செய்யபட்டுள்ளது. விரைவில் செயல்படுத்தபடும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *