• Sat. Apr 27th, 2024

சோழவந்தானில் ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் ஒரு வழி பாதையாக மாற்ற பொதுமக்கள் கோரிக்கை

ByKalamegam Viswanathan

Feb 19, 2024

சோழவந்தானில் பெரிய கடை வீதி முதல் மார்க்கெட் வழியாக பேருந்து நிலையம் வரை ஒருவழிப்பாதை கடைபிடிக்காதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பஸ் காலதாமதமாக வருவதால் பயணிகள் அவதிப்படுவதாகவும், ஆகையால் காவல்துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பு சோழவந்தான் புதியபஸ் நிலையம் திறக்கப்பட்டு, இதில் நகர பேருந்துகள் மட்டும் இங்கு வந்து செல்கின்றன. மார்க்கெட் ரோடு வழியாக பஸ் நிலையத்திற்கு பஸ் செல்வதற்கு ஒரு வழி பாதை இல்லாததால் மீறி வாகனங்கள் எதிரே வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பஸ் காலதாமதமாக ட்ரிப் எடுக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் காவல்துறைக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஏற்கனவே மார்க்கெட் ஒரு வழி பாதையாக கடைப்பிடித்து காலப்போக்கில் இதை கிடப்பில் போட்டு விட்டனர். இதனால் அந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்களுக்கு எதிரே வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல சிரமத்திற்கு வாகன ஓட்டிகள் தள்ளப்படுகின்றனர். இதனால் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் சோழவந்தானில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு ஏற்கனவே இருந்து வரும் மார்க்கெட் ரோட்டைஒரு வழிப்பாதையாக செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் மிகவும் சிறப்பு பெற்று வரும் நிலையில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அம்மனை தரிசிக்க வாகனத்தில் வருகின்றனர். இதனால் மாரியம்மன் சன்னதி ரோட்டை ஒருவழிப்பாதையாக ஏற்படுத்தி கொடுத்து அந்த ரோட்டில் இருபுறமும் ரோட்டை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *