

மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தென் மாவட்டங்களுக்கு பயன்படும் பகல் நேர ரயிலாகும். இந்தநிலையில் சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்து கொண்டிருக்கும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள குளிர்சாதன பெட்டியில் முறையான பராமரிப்பு குறைபாடு காரணமாக ரயில் பெட்டியினுள் பெருச்சாளிகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் ரயில் பயணிகளின் உடமைகளை கடித்து சேதப்படுத்தி இருப்பதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக பயணிகளின் உணவு பொருள்களை எலிகள் சாப்பிட்டு ஆங்காங்கே சுற்றி திரிவது முதியவர்கள் மற்றும் பெண் பயணிகளுக்கிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் கவலை பயணிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ரயில் பராமரிப்பு மையங்களில் முறையான பராமரிப்பு நடத்தி இதுபோன்று இடர்பாடுகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுகின்றனர்.


