• Wed. Mar 19th, 2025

போதையில்லா மதுரை என்ற தலைப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி

ByKalamegam Viswanathan

Feb 20, 2024

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே நிலையூர் ஊராட்சியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு போதை பற்றிய விழிப்புணர்வு மாணவர்கள் நல ” நிகழ்ச்சி நடை பெற்றது.

போதை விழிப்புணர்வு -அளித்து போதை இல்லாத மதுரையை உருவாக்குவோம் என்னும் நோக்கில் மாணவர்கள் நல விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகராட்சி மேயர் திருமதி. இந்திராணி பொன்வசந்த் அவர்கள் முன்னிலையில் இன்று நிலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதையில்லாத சமுதாயம் என்னும் தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் மேற்கு மண்டல தலைவர் திருமதி. ஸ்வேதா விமல் நிலையூர் ஊராட்சி மன்ற தலைவர் எம். எஸ் .பசும்பொன் மற்றும் நிலையூர் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எம்‌.ஜே மெரிலா ஜெயந்தி அமுதா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை சி.எஸ். டபிள்யூ நிறுவனர் திருநாவுக்கரசு ஏற்பாடு செய்திருந்தார்.