மதுரை ரயில்நிலையத்தில் சென்னை – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.180 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் வழக்கம் போல் மதுரை வந்தடைந்தது. அதில் பயணித்த ஒருவர் போதைப்பொருள் கடத்திச் செல்வதாக ரகசிய தகவல் நுண்ணறிவும் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள்  மதுரையில் அந்த நபரை சுற்றி வளைத்தனர். அப்போது அவரிடம் சோதனை செய்தனர்.
அவரிடம் பல கோடி மதிப்புள்ள மெத்தபைட்டமின் என்ற போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து அவரிடம் விசாரித்த போது அவர் சென்னையை சேர்ந்த சிலமன் பிரகாஷ் (42) என்று தெரிய வந்தது. பிடிபட்ட போதைப் பொருளுடன் ரகசிய இடத்திற்கு அவரை கொண்டு சென்று அவரிடம் விசாரித்து வருகின்றனர். 180 கோடி மதிப்புள்ள 36 கிலோ அளவில் மெத்தபைட்டமின் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் சென்னையில் எந்த பகுதியை சேர்ந்தவர். அவர் கொண்டு வந்த போதைப்பொருள் எங்கிருந்து கிடைத்தது, எங்கு கொண்டு சென்றார், இவருக்கு பின்னால் யார் உள்ளனர் என்பது குறித்து அதிகாரிகள் பிடிபட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில்வே காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்தனர். இது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
மதுரை ரயில்நிலையத்தில் ரூ.180கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
 
               
                               
                  












; ?>)
; ?>)
; ?>)