

நாகை – நாகூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜீவ ரத்தினம் நற்பணி மன்றத்தின் சார்பாக மாரத்தான் போட்டி பிரமாண்டமாக நடைபெற்றது. 5000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு, ஜீவ ரத்தினம் நற்பணி மன்றத்தின் சார்பாக பிளாஸ்டிக் இல்லாத தூய்மையான கடற்கரையை உருவாக்க வலியுறுத்தியும், மினி மாரத்தான் போட்டி தொடங்கியது.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அக்கரைப்பேட்டை ஸ்ரீ சப்தகன்னி ஆலயம் வரை 8 கிலோமீட்டர் தூரம் நடைபெறும் மாரத்தான் போட்டியில் 5000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

மாரத்தான் போட்டியை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், எம்.எல்.ஏ நாகை மாலி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ். முதல் 11 இடங்களை பிடித்தவர்களுக்கு ஊக்கத் தொகையுடன் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.


