நித்தி கிரியேட்டர்ஸ் பி.ராஜசேகரன் தயாரித்து கார்த்தி தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “திரைவி”.

இத்திரைப்படத்தில் முனிஷ்காந்த், ஆஷ்னா சவேரி, அசோக் குமார், வினோத் சாகர், சரவண சுப்பையா, நிழல்கள் ரவி, ஆர்.எஸ்.நித்திஷ், உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.
நாயகன் அசோக்குமாரும் நாயகி அஷ்னா சவேரி இருவரும் தம்பதியினர்,

இவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடந்து வரும் நிலையில் அஷ்னா சவேரியை அவரது வீட்டில் பூட்டி வைக்கிறார். இந்த வீட்டிற்கு செக்யூரிட்டியாக வினோத் சாகர் இருக்கிறார்.
வெளியில் வர முடியாமல் தவிக்கும் அஷ்னா தற்கொலை முயற்சியில் இறங்குகிறார்.
அப்போது கதையின் நாயகன் முனிஷ்காந்த் (அன்பு) திருடுவதற்காக பூட்டிருந்த வீட்டிற்குள் திருட்டுத்தனமாக உள் நுழைய அஷ்னா தற்கொலை முயற்சி தோல்வியடைந்தது.

அந்த கடுப்பில் அஸ்னா துப்பாக்கியால் முனீஷ்காந்தை பிடித்து என்னை ஏன் கொல்ல வந்தாய்?என்று கேட்க நான் உன்னை கொலை செய்ய வரவில்லை நான் திருட வந்தேன்,என்று கூற பதிலுக்கு நீ இங்கிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் என்னை கொலை செய்துவிட்டு நீ தப்பித்து செல் இல்லையென்றால் உன்னை போலீசில் மாட்டி விடுவேன் என்கிறார் அஸ்னா.
முனீஷ்காந்த் அஸ்னாவை கொலை செய்துவிட்டு தப்பித்து சென்றாரா?அஷ்னா தம்பதியினருக்கு இடையில் இருக்கும் பிரச்சனை என்ன?எதற்காக கொலை முயற்சியில் இறங்கினார்? இதுதான் படத்தின் மீதி கதை.
முனிஷ்காந்த் இது எனக்கு முதல் திருட்டு எனக்கு கல்யாணம் ஆகப்போகிறது லேட் மேரேஜ் நான் வாழ வேண்டும்.
திருட தான் வந்தேன் என்னை காலம் பூரா கொலை குற்றவாளியாக ஜெயிலில் வைத்து விடாதீர்கள் மேடம், என்று பேசும் வசனமும் எனது கல்யாணத்துக்கு உங்களை சீப் கெஸ்ட்டாக அழைக்கிறேன்.
என்னை தப்பிக்க விட்டு விடுங்கள் ஈ எறும்புக்கு கூட தீங்கு தீங்கு நினைக்காதவன் நான்.
எனக்கு சுட தெரியாது மேடம் என்று கெஞ்சும் நடிப்பும், அவரது காமெடியும் பார்வையாளர்களை கிரங்கடித்துள்ளது.

கணவனால் பாதிக்கப்பட்ட பெண் அஸ்னா என்று கதை நகர்ந்து கொண்டிருக்கும் போது திடீரென கணவனை போட்டு தள்ளத்தான் இந்த ஸ்கெட்ச் என்று அப்பாவி முனீஸ்காந்த் – யிடம் கூறும் போது அஷ்னா முகபாவனை வில்லத்தனமாக மாறிய நடிப்பு ஸ்கோர் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய கதாபாத்திரமாக இருந்தாலும் காட்சிகளில் சிறிது நேரம் மட்டுமே தோன்றுகிறார் அசோக்குமார்.
மற்ற கதாபாத்திரத்தில் நடித்த வினோத் சாகர், நிழல்கள் ரவி, சரவண சுப்பையா, ஆகியோர்கள் காட்சிகளில் சிறிது தோன்றினாலும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
என் டி ஆர் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.
முழுக்க முழுக்க ஒரு வீட்டிற்குள்ளேயே அதிக காட்சிகள் எடுக்கப்பட்டாலும், பார்வையாளர்களுக்கு சலிப்பு இல்லாமல் படம் பிடித்துள்ளது, அதிசயராஜின் கேமரா கண்கள்.
உலகில் நல்லவர்கள் யாரும் கிடையாது அதே போல் கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது, சூழ் நிலை தான் அவரவரை அடையாளப்படுத்துகிறது.
என்ற கருத்தை மையப்படுத்தி திரில்லராக அடுத்தடுத்த காட்சிகள் என்ன என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு கதையை நகர்த்தி உள்ளார்,இயக்குனர் கார்த்திக் தட்சிணாமூர்த்தி.










