• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையம் நகராட்சி அலட்சியத்தால் வீணாகும் குடிநீர்

ByKalamegam Viswanathan

Apr 26, 2023

ராஜபாளையம் நகராட்சி அலட்சியத்தால் காந்தி சிலை சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகி வருவதால் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி மொத்தம் 42 வார்டுகளை கொண்டது.இந்த நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சாலை ,தாமிரபரணி கூட்டு குடிநீர், மேம்பால பணிகள் உள்ளிட்டவைகள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில் ரயில்வே பீடர் சாலை காந்தி சிலை அருகே பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் குழாய் உடைந்து நீர் வெளியேறி வீணாகி வருகிறது. உடனே நகராட்சி நிர்வாகம் உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.