• Tue. Sep 16th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஜூன் 1 முதல் வங்கி விதிகளில் அதிரடி மாற்றங்கள்

Byவிஷா

May 30, 2025

ஜூன் 1ஆம் தேதி முதல் வங்கி விதிகளில் அதிரடி மாற்றங்கள் வர உள்ளன.
சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் 5 இலவச பணப் பரிவர்த்தனைகளைப் செய்து கொள்ளலாம். அதேபோல், ரூ.5 லட்சம் வரை பணத்தை டெபாசிட் செய்யலாம் அல்லது எடுக்கலாம். மேலும் பரிவர்த்தனைக்கு குறைந்தபட்சம் ரூ.100 ஆக இருக்கும்.
கிளப், டிலைட், அனைத்து என்ஆர்ஐ மற்றும் குடியுரிமை சேமிப்புத் திட்டக் கணக்கு வைத்திருப்பவர்களும் ரூ.5,000 ஏஎம்பி பராமரிக்க வேண்டும். பொது வாடிக்கையாளர்களுக்கு 20மூ வரை பற்றாக்குறைக்கு ரூ.75 மற்றும் 100சதவீதம் பற்றாக்குறைக்கு அதிகபட்சம் ரூ.375 வரை கட்டணம் செலுத்த வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரூ.60 முதல் ரூ.300 வரை கட்டணம் வசூலிக்கப்படும். கிராமப்புற கிளைகளில், அனைத்து கணக்குகளுக்கும் கட்டணம் சற்று குறைவாக இருக்கும். பொது வாடிக்கையாளர்கள் ரூ.60-ரூ.300 மற்றும் மூத்த குடிமக்கள் ரூ.50-ரூ.250 செலுத்த வேண்டும்.
இலவச வரம்பைத் தாண்டிய பிற வங்கி ஏடிஎம்களில் இருந்து பரிவர்த்தனைகளுக்கு நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.23 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ.12 (இருப்பு விசாரணை போன்றவை) வசூலிக்கப்படும். குறைந்த இருப்பு காரணமாக நிராகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25 வசூலிக்கப்படும். ஃபெடரல் வங்கி ஏடிஎம்களில் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.

லாக்கர் வாடகையாக கிராமப்புற மற்றும் சிறு நகரக் கிளைகளுக்கு, சிறிய லாக்கருக்கு ரூ.2,000 வாடகையும், நடுத்தத்துக்கு ரூ.3,300 வாடகையும், பெரிய லாக்கருக்கு ரூ.5,500 வாடகையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் நகர்ப்புற மற்றும் பெருநகரக் கிளைகளுக்கு சிறிய லாக்கருக்கு ரூ.2,950 முதல் ரூ.5,000 வரையும், நடுத்தரத்துக்கு ரூ.3,950 முதல் ரூ.6,800 வரையும், பெரிய லாக்கருக்கு ரூ.7,400 முதல் ரூ.12,800 வரையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கணக்கை மூடும் கட்டணங்களுக்கான விதிமுறைகள்:
6 மாதங்களுக்குள் மூடினால் ரூ.100. கிராமப்புற அல்லது மூத்த குடிமக்கள் கணக்குகளுக்கு ரூ.100, பிற கணக்குகளுக்கு ரூ.300 செலுத்த வேண்டும். மேலும், முதல் வைப்புத்தொகையிலிருந்து 14 நாட்களுக்குள் கணக்கு மூடப்பட்டால் கட்டணம் எதுவும் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.