• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வசூல் சாதனை செய்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’

Byமதி

Oct 12, 2021

சிவகார்த்திகேயன் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் கடந்த 9 ஆம் தேதி வெளியான ’டாக்டர்’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ரசிகர்கள் மட்டுமின்றி திரை பிரபலங்களும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர். இதனால், இப்படம் வசூல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது.


ரசிகர்கள் குடும்பங்களுடன் தியேட்டருக்கு வந்து ‘டாக்டர்’ படத்தை பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில், ‘டாக்டர்’ வெளியான இரண்டே நாட்களில் தமிழகத்தில் 18 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதும் என்றும், வெளிநாடுகளில் 6 கோடி ரூபாயும், கர்நாடகா, ஆந்திராவில் 1 கோடிக்கு ரூபாய்க்கு மேலும் வட இந்தியாவில் 22 லட்ச ரூபாயும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொத்தமாக சேர்த்து 27 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று சொல்லப்படுகிறது.