• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முடிவுக்கு வரும் தூர்தர்சன் மற்றும் அகில இந்திய வானொலி ஒளிபரப்பு சேவை

26 ஆண்டுகள் இராமேஸ்வரத்தில் செயல் பட்டு வந்த தூர்தர்சன் தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலியின் சேவைகளின் ஒளிபரப்பை டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு கொண்டுவருகிறது.

இராமேஸ்வரம் இராமர் பாதம் செல்லும் வழியில் உயர் சக்தி ஒளிபரப்பு கோபுரம் 1060 அடி உயரம் கொண்ட இந்த கட்டமைப்பு வலுவான கான்கிரீட் சிமெண்ட் கலவையால் உருவாக்கப்பட்டது. இந்தியாவிலேயே மிக உயரமான கட்டிடங்களின் ஒன்றான இந்தப் கோபுரம் ஆசியாவிலும் உயரமான ஒளிபரப்பு கோபுரம் ஆகும். இந்த கோபுரத்திலிருந்து 1995ம் ஆண்டு முதல் தூர்தர்சன் தொலைக்காட்சி மற்றும் அகில இந்திய வானொலியின் சேவைகளும் ஒளி, ஒலிப்பரப்பப் படுகின்றன.  தமிழகத்திலுள்ள கடற்கரை மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் ராமேஸ்வரம் தொலைக்காட்சி நிலையத்தின் ஒளிபரப்பு சேவை கிடைத்து வந்தது.

இந்த நிலையில் நாட்டிலேயே அதிக பரப்பளவு ஒளிபரப்பாகும் நிலையங்களுள் ஒன்றாக மட்டும் இல்லாமல் இலங்கைக்கும் ஒளிபரப்பு சேவை கிடைத்த சிறப்பு ராமேஸ்வரம் தொலைக்காட்சி நிலையத்திற்கு உண்டு. ராமேசுவரம் தீவு மீனவர்களுக்கு இந்த கோபுரத்தின் உச்சியில் விளக்கு வெளிச்சம் கலங்கரை விளக்கம் போன்றது. இதன் ஒளி இலங்கையில் உள்ள மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் கடற்பகுதியில் கூட தெரியும். இந்நிலையில் 26 ஆண்டுகள் செயல்பட்டு வந்த ராமேஸ்வரம் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவை டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.

இந்தியாவில் தரைவழி ஒளிபரப்பை மக்கள் தற்போது பார்ப்பது அரிதாகி விட்டது. டிடிஎச், கேபிள் டிவி, இணையம் வழியாக நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி சேனல்களை மக்கள் கண்டுகளிக்கின்றனர். தரை வழி தொலைக்காட்சி ஒளிபரப்பில் தூர்தர்ஷன் மட்டுமே கிடைத்து வருவதால் மக்கள் இச்சேவையை பயன்படுத்துவது இல்லை. இதன் காரணமாக தற்போது நடைமுறையிலுள்ள அனலாக் டிரான்ஸ்மிட்டா் தொழில்நுட்பத்தை, டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு  மாற்றும் நடவடிக்கையில் பிரஷார் பாரதி நிறுவனம் கொண்டுவருகிறது.