திமுக மாநில இளைஞரணி செயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டும், தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிறந்தநாளை முன்னிட்டும் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவ பத்மநாதன், தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம் ஆலோசனையின் படி காசிமேஜர்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு எடை பார்க்கும் இயந்திரம் வழங்கப்பட்டது.

காசிமேஜர்புரம் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலம் இசக்கி பாண்டியன் தலைமை வகித்து இனிப்பு வழங்கினார். திமுக நிர்வாகி குற்றாலம் இசக்கிபாண்டியன், கிளைச் செயலாளர்கள் ஆறுமுகம், நீலகண்டன், நிர்வாகிகள் சீனிவாசன், மாணிக்கம், செண்பகம், லட்சுமணன், நவநீதன், ஆட்டோ கண்ணன், ராஜா, தலைமை ஆசிரியை பாலம்மாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.