

பிரதாபராமபுரம் கிராம ஊராட்சியில்உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தி கிராம மக்கள் கடற்கரையில் கையில் பதாகைகளுடன் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் ஜனவரி 5 ஆம் தேதியோடு முடிவடைந்த நிலையில் மறு தேர்தலுக்கான அறிவிப்பு இதுவரை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை.இதனால் தனி அலுவலர்கள் மூலமாக ஊராட்சி நிர்வாகம் செயல்பட்டு வருவதால் நாம மக்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.தேர்தல் ஆணையம் உடனடியாக கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டுமென தன்னாட்சி அமைப்புகள் சார்பில் பல்வேறு கவன ஈர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி பிரதாபராமபுரம் ஊராட்சி மக்களோடு இணைந்து ஊராட்சி தேர்தலின் அவசியம் குறித்தும், உடனே தேர்தல் நடத்த வலியுறுத்தி கடற்கரை பகுதியில் பேரணியாக நடந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கையில் பதாகைகளை ஏந்திய படி கிராம மக்கள்
வேண்டும் வேண்டும் ஊராட்சி தேர்தல் வேண்டும், உடனே நடத்துக உடனே நடத்துக ,தள்ளிப் போடாதே தள்ளிப் போடாதே
பஞ்சாயத்து தேர்தலை தள்ளி போடாதே,ஒன்றுபடுவோம் ஒன்றுபடுவோம்
ஊராட்சி தேர்தலுக்காக ஒன்றுபடுவோம்
உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

