• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குடை ஊர்வலத்தின்போது காணிக்கை போடவேண்டாம்- : திருப்பதி தேவஸ்தானம்

ByA.Tamilselvan

Sep 5, 2022

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் நடைபெறும் குடை ஊர்வலத்தின் போது காணிக்கை போட வேண்டாம் என திருப்பதி தேவஸ்தானம் தகவல்.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் :- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாள் கருடசேவை நடக்கும். அன்று உற்சவர் மலையப்பசாமிக்கு பிரத்யேக குடை அலங்காரம் செய்யப்படும். ஒரு இந்து அமைப்பு உற்சவர் மலையப்பசாமிக்கு சமர்ப்பிப்பதற்காக பிரத்யேக குடைகளுடன் சென்னையில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக திருமலையை நோக்கி வரும். குடை ஊர்வலத்தின்போது எந்தவொரு பக்தரும் காணிக்கை போடக்கூடாது. குடை ஊர்வலத்தின்போது பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்துக்கு சென்றடைவதில்லை. எனவே பக்தர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.