திமுக கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளர் செயல்வீரர்கள் கூட்டம் பழனியில் துவங்கிய போது உள்ளூர் காங்கிரஸ் கட்சியினருக்கு மரியாதை இல்லை மேற்கு மாவட்டத்திற்கு சம்பந்தமில்லாத காங்கிரஸ் தலைவர் இங்கு வந்து நாட்டாமை செய்கிறார் என்று கூறி பழனி காங்கிரஸ் கட்சியினர் செயல் வீரர்கள் கூட்டத்தில் வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சண்டை போடாதீங்க சமாதானமா போங்க என்று கூட்டத்தில் கூடி இருந்தவர்கள் சிலர் சமாதானப்படுத்தினர்.