மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியத்தில் அதிமுக சார்பில் பூத் கமிட்டி கூட்டம் அப்பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அலங்காநல்லூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் அழகுராஜா வரவேற்புரை ஆற்றினார்.


முன்னாள் எம்எல்ஏக்கள் எம் வி கருப்பையா மாணிக்கம் மகேந்திரன் ஒன்றிய செயலாளர்கள் கொரியர் கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன் முன்னாள் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா விவசாய அணி வாவிட மருதூர் ஆர்பி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர். பி.உதயகுமார் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி பேசியபோது, ஒவ்வொரு பூத்திற்கும் 9 பேர் கொண்ட குழுவாக 234 தொகுதிக்கும் பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். நிர்வாகிகள் சிறப்பாக பணிபுரிய வேண்டும் எனவும் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவினர் 5 ஆயிரம், 10 ஆயிரம் தருவதாக கூறி ஒட்டு கேட்பார்கள். நம்பி ஒட்டு போடாதீங்க.


மரியதை கிடைக்கும்னு நம்பி மீண்டும் நீங்க ஒட்டு போட்டா 5 வருசத்துக்கு உங்களுக்கு மரியாதையே கிடைக்காது. உஷார் மக்களே என கூறினார். நம்பி வாக்களித்த பொதுமக்கள், அரசு ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவருக்கும் பட்டை நாமம் தான் கிடைக்கும் எனவே அதிமுக வெற்றிக்கு அனைவரும் பாடுபட வேண்டும் என பேசினார். இதில் நிர்வாகிகள் நாட்டாமை சுந்தர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் முடுவார் பட்டி ஜெயச்சந்திர மணியன் வாவிட மருதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசர் வழக்கறிஞர் காசிநாதன் மகளிர் அணி ரேவதி சாந்தி மாரிமுத்து மற்றும் அலங்காநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்




