• Sat. Apr 27th, 2024

ஏழை எளிய மாணவர்களின் படிப்பிற்காக ரூபாய் 35 லட்சத்தை நன்கொடை..!

Byகுமார்

Jul 21, 2023

மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 1998 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் 25வது வெள்ளி விழா இணைதல் நிகழ்ச்சியில் ஏழை எளிய மாணவர்களின் படிப்பிற்காக ரூபாய் 35 லட்சத்தை நன்கொடையாக அளித்தனர்.

மதுரை அருகே திருப்பரங்குன்றம் பகுதியில் அமைந்துள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் 1998 ஆம் ஆண்டில் பயின்ற மாணவர்களின் வெள்ளிவிழா இணைதல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு முதல்வர் முனைவர் பழனி நாதராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உரையில் அவர் கூறியது, தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் ஐயா அவர்கள் தமிழகத்தில் பள்ளிகளுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தது போல் 1998 இல் பயின்று பட்டம் பெற்றமாணவர்கள் நம் கல்லூரியின் ஏழை எளிய மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை அறிமுகப்படுத்தி சுமார் 50 மாணவர்களுக்கு உணவு அளித்து வருவதாகவும் இந்த வெள்ளிவிழா நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு ஏழை எளிய மாணவர்களின் படிப்பிற்காக ரூபாய் 35 லட்சத்தை நன்கொடையாக அளித்தனர். இந்நிகழ்ச்சியில் தங்கள் ஆசிரியர்களை கௌரவிக்கும் விதமாக நினைவு பரிசுகளை வழங்கினர் இந்த முன்னாள் மாணவர்கள் இணைதல் நிகழ்ச்சியில் 10 முன்னாள் மாணவர்களுடன் தொடங்கியதாகவும், தற்போது 200க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் நடந்து வருவதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர் இந்த முன்னாள் மாணவர்கள் சுமார் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் வசித்து வருவதாக பெருமையுடன் தெரிவித்தனர். அவர்களில் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் முனைவர்களாகவும் பேராசிரியர்களாகவும் இருந்து வருவதாகவும் 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகளாக இருப்பதாகவும் தெரிவித்தனர் பின்னர் தங்கள் கல்லூரி நினைவுகளாக வகுப்பறை மற்றும் நூலகம் முன்பாக அமர்ந்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *