• Sun. Sep 21st, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனா?

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,102 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 278 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,28,67,031 ஆக உள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 13,405 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 15,102 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 1,600 அதிகம். கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,28,67,031 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 235 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 278 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,12,622 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 31,377 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,21,89,887 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 1,81,075 ஆக இருந்த நிலையில்,தற்போது 1,64,522 ஆக குறைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 1,76,19,39,020 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 33,84,744 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.